
ஜனவரி 11லிருந்து 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் அம்னோ தேர்தலில் மேல்மட்ட இரு பதவிகளுக்குப் போட்டி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ பங்கெடுத்துக் கொண்டதை உறுப்பினர்களுக்குத் தெரிவிக்காமல் எடுத்த முடிவு என்பதால், அது பற்றிய காரசாரமான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோவின் எதிர்காலத்தை வடிவமைக்க அந்தக் கூட்டம் வழி வகுக்கும்போது, அதற்கு வெளிப்படையான, நம்பகத் தன்மை கொண்ட தலைவர்கள் வேண்டும் என்ற சிந்தனை கட்சியில் உருவாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் உச்சமன்ற உறுப்பினரான Nazri Aziz (நஸ்ரி அஸிஸ்), கட்சித் தேர்தலை இனிமேலும் ஒத்தி வைக்காமல் நடத்த வேண்டுமென்றும் கட்சியின் எல்லாப் பதவிகளுக்கும் போட்டி இருக்க வேண்டுமென்றும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.



