
கோலாலம்பூரில் இருக்கும் பழைமையான குடியிருப்பான கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் ஜனவரி மாத மத்திக்குள் வீடுகளைக் காலி செய்ய வேண்டுமென நில மற்றும் சுரங்க இலாகா உத்தரவிட்டுள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் காலிட் சாமாட், போதுமான இழப்பீடு வழங்காத காரணத்தினால் 10 விழுக்காட்டினர் தங்களின் வீடுகளைக் காலி செய்யாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.
அப்பகுதியில் வசிப்போர் தங்களின் மூதாதையர்களுக்குச் சொந்தமான இல்லங்களில் பல காலமாக இருந்து வருவதால், போதுமான இழப்பீட்டைப் பெறத் தகுதி பெற்றவர்கள் என அவர் தெரிவித்தார். எனவே, அரசு இதில் கவனம் செலுத்தி தகுந்த முடிவை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
அங்குள்ள நிலத்தின் ஒரு சதுர அடிக்கு 1,500 ரிங்கிட்டை தனியார் மதிப்பீட்டு நிறுவனம் கணித்திருந்த வேளையில், கம்போங் பாரு மேம்பாட்டு நிறுவனம், சதுர அடிக்கு வெறும் 500 ரிங்கிட்டை மட்டுமே தர முன் வந்ததால் பிரச்சினை எழுந்தது குறிப்பிடத்தக்கது.



