
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெடா மாநிலத்தில் சூதாட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, மதுபானத்திற்கும் தடை விதிக்கப்படும் என அம்மாநில மந்திரி பெசார் Muhammad Sanusi Mad Nor (முகமட் சனுசி மாட் நோர்) அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுபானத் தடையை கெடா லங்காவி தீவில் அமல்படுத்தினால் அங்கு சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்படும் என சுற்றுலாத் துறையைச் சார்ந்த தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வரியில்லா மதுபான விற்பனையே அதிகமாக ஈர்க்கும்போது, அதற்கான தடையானது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, வேலையிழப்பை உருவாக்கி நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும்.
மதுபான விற்பனைக்கான தடை முஸ்லிம்களுக்கு மட்டுமே விதிப்பதோடு அதன் விற்பனைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.
