31.3 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

சபாவில் நாடற்ற பிரஜைகளாக இருக்கும் 300 இந்தியப் பிள்ளைகள்! விடிவுகாலம் எப்போது?

🔥 Views : 22
👁 Reading Now : 70

🔊To listen to this news in Tamil, Please select the text.

துன் சம்பந்தன் காலத்தில் வேலை செய்வதற்காக சபாவிற்கு அனுப்பப்பட்ட ஆயிரக் கணக்கான இந்தியர்களின் வம்சாவளியினர் எந்தவொரு அடையாள ஆவணமும் இன்றி நாடற்ற பிரஜைகளாக இருப்பதாக பேரிடியான விவரத்தை முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் போட்டு உடைத்துள்ளார்.
பெலுரான், சண்டாகான், லஹாட் டத்து போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டு, வேலை செய்த அவர்களின் வழித் தோன்றல்கள் இப்போது எந்தவொரு அடையாள ஆவணமுமின்றி, அரசின் எந்தவொரு உதவியும் கிடைக்காமல், போலீஸுக்குப் பயந்து வெளியில் செல்ல பயந்து முடங்கிக் கிடப்பதாக குலசேகரன் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சராக தாம் இருந்தபோது, அப்பிரச்சினையை அமைச்சரவையில் எடுத்துரைத்ததாகவும், அதன் பின்னர் இந்த விவகாரத்தில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை.
எனவே, ஒற்றுமை அரசாங்கம் இதில் தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டுமென குலசேகரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles