31.3 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

நாட்டில் ஆள் பற்றாக்குறை தீர்வது எப்போது?

🔥 Views : 21
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் பல்வேறு துறைகளுக்கு இன்னமும் 10 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக மலேசிய வேலை வாய்ப்பு நிறுவன சங்கத்தின் தலைவர் பூ யோங் ஹூ குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமானம், விவசாயம், சேவைத் துறை, பொருள் தயாரிப்புத் துறை போன்றவற்றில் ஆள் பற்றாக் குறையால் ஒவ்வொரு நாளும் கோடிக் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் 22 லட்சமாக இருந்த அந்நியத் தொழிலாளர் எண்ணிக்கை 2 லட்சமாகக் குறைந்தது.
இந்நிலையில், கட்டுமானத்திற்கு 3 லட்சம், விவசாயத் துறைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம், தயாரிப்புத் துறைக்கு 1 லட்சத்து 30 ஆயிரம், சேவைத் துறைக்கு 1 லட்சம் தொழிலாளர்கள் என மொத்தம் 10 லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
நாட்டில் இருக்கும் 1 கோடியே 60 லட்சம் தொழிலாளர்களில் வெளிநாட்டுத் தொழிலாள- ர்கள் 14 லட்சம் பேர் உள்ளனர்.
தற்போது 15 விழுக்காடாக இருக்கும் அந்நியத் தொழிலாளர் எண்ணிக்கையை 25 விழுக்காடாக அதிகரித்தால் மட்டுமே தொழிலாளர் பற்றாக்குறை தீரும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles