28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சக்கர நாற்காலி நோயாளிகளுக்கு வழிபாடு நடத்த தனிப் பாதை கிடையாது

🔊To listen to this news in Tamil, Please select the text.

சக்கர நாற்காலி நோயாளிகள் ஆலயத்தில் உள்ளே சென்று வழிபாடு நடத்த தனிப்பாதை அமைத்துத் தர ஆலய நிர்வாகம் வாக்குறுதி கொடுக்கவில்லை என்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆலயத் தலைவர் டி. மகாரதன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, சக்கர நாற்காலி நோயாளி ஒருவரை அந்த ஆலயத்தினுள் சென்று வழிபாடு நடத்த நிர்வாகம் அனுமதிக்காததை எதிர்த்து பெண்மணி ஒருவர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.
அதனையடுத்து, மலேசிய இந்து தர்ம மாமன்றத் தலைவர் அந்த ஆலய நிர்வாகம் சக்கர நோயாளிகளுக்குத் தனிப்பாதை வசதியைச் செய்து கொடுக்க சம்மதித்ததாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், மகாரதன் அதற்குப் பதிலளிக்கும்போது, அப்படியொரு முடிவை ஆலய நிர்வாகம் எடுக்கவில்லை என்றும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருதி, அவர்கள் ஆலயத்தின் உள்ளே சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுப்பதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles