28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆகஸ்டு மாதமே சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, அலோர் ஸ்டார் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இன்ஸ்பெக்டரின் மீதான விசாரணையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டுமென Suara Rakyat Malaysia (Suaram) சுவாரா ராக்யாட் மலேசியா(சுவாராமின்) செயல்முறை இயக்குநர் சிவன் துரைசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதோடு, கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் விசாரணையை மேற்கொள்ள நடைமுறைகள் சீரமைக்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
போலீஸார் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவது அத்துறைக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி வருவதால், இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்ட Independent Police Complaints and Misconduct Commission (IPCMC) (சுயேச்சை போலீஸ் புகார், ஒழுங்கு நடவடிக்கை ஆணையத்தை) அமைக்க நேரம் வந்து விட்டதாக சிவன் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்கச் சென்ற தம்மை போலீஸ் இன்ஸ்பெக்டர்(30) ஒருவர் பாலியல் வல்லுறுவு செய்ததாகக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லையென்றும் இதில் தாம் தனி கவனம் செலுத்தி, பெண்ணுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யப் போவதாக சட்டத் துறை அமைச்சர் அஸாலினா ஓஸ்மான் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles