29.6 C
Kuala Lumpur
Tuesday, August 25, 2026

Vetri

958 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டதில் பிரதமர் தலையிட வேண்டும்

🔥 Views : 19
👁 Reading Now : 42

🔊To listen to this news in Tamil, Please select the text.

Inland Revenue Board (LHDN) (வருமான வரி இலாகா)வில் நாடு முழுமையிலும் பணியாற்றி வந்துள்ள ஒப்பந்த ஊழியர்கள் 958 பேர் டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து பணியிலிருந்து நீக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்கு மேலாக 65 ரிங்கிட் தினச் சம்பளத்தில் பணியாற்றிய பின்னர், பதவி நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலையிட்டு நியாயம் கிடைக்க Malaysian Trades Union Congress (MTUC) (மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின்) தலைமைச் செயலாளர் Kamarul Bahrin Mansor (கமாருல் பாஹ்ரின் மன்சோர்) கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறும்போது, அண்மையில் வருமான வரி இலாகா 700 நிரந்தரப் பணியாளர்ளை அமர்த்திய பின்னர், ஒப்பந்த ஊழியர்களை நீக்கியது ஏன் என்றும் அவர் கேள்வியைத் தொடுத்தார்.
எம்டியுசி அளித்த மகஜரை பிரதமரின் அரசியல் செயலாளர் Shamsul Iskandar Md Akin (ஷம்சுல் இஸ்கண்டார் ஆக்)கின் பெற்றுக் கொண்டு, பிரதமர் இதில் தனி கவனம் செலுத்துவார் என்று குறிப்பிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles