33.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கடன் சொல்லி விமானம் ஏறிய கரோத்தே குழு தங்கப் பதக்கத்தோடு நாடு திரும்பியது

🔥 Views : 7
👁 Reading Now : 30

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரான்ஸ், நைஸில் நடந்த பிரான்ஸ் அனைத்துலக 15-17 வயதுடையோருக்கான பொது கரேத்தே போட்டியில் கலந்து கொண்ட இந்தியர் வீரர்களைக் கொண்ட குழு தங்கம் உட்பட பல பதக்கங்களை வாகை சூடி நாடு திரும்பியுள்ளது.
Okinawan Shorin-Ryu Sei-bu-kan Karate Do Association of Malaysia (IOSSKAM), (மலேசியா ஓக்கினாவா ஷொரின் சி-பு-கான் கரேத்தா டோ கழகத்தின் தலைவர் மீனாலோசினி பத்மநாதன் அது பற்றிக் கூறும்போது, நைஸிற்கு செல்ல பலரின் உதவியை நாடியபோது, சிலர் தங்களை எள்ளி நகையாடியதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், சில நல்லுள்ளங்களின் நன்கொடையின் மூலமும் மஇகா வழங்கிய 10,000 ரிங்கிட்டோடு மொத்தம் 18,000 ரிங்கிட்டை திரட்டிய பின்னர், போக்குவரத்து நிறுவனம் ஒன்று வழங்கிய கடனிலும் தமது வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதாகத் தெரிவித்தார்.
இந்தியா, உக்ரோய்ன், ரோமானியா, இத்தாலி ஆகிய நாடுகள் பங்கு கொண்ட அப்போட்டியில், முதன்முறையாக மலேசியா- வுக்கு தங்கப் பதக்கம் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அந்தக் குழுவின் தலைவர் ஏ. யசோதரன் தலைமையில் சென்ற நிவாஷினி சிவராமன்(17)-தங்கம், தவனேஸ்வரி முனியாண்டி(18)-வெள்ளி, பிரவீன் இளஞ்சேரன்-வெள்ளி, சச்சினாந்தா குபேரன் பத்மநாதன், மகேஸ்வரன் வி. கணேஷ், பிரவீன் இளஞ்சேரன் தர்மலிங்கம், பிரகாஸ் முகமட் அர்ஜுனா ஆகியோருக்கு வெண்கலப் பதக்கம், பிரவீட்ரா தேவி வி. கணேஷ், நிவாஷினி சிவராமன், தவனீஸ்வரி முனியாண்டி ஆகியோருக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles