
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசின் சிறப்புக் குத்தகைத் திட்டத்தில் இரு நிறுவனங்களுக்கு குத்தகையைப் பெற்றுத் தந்து, அதிலிருந்து கமிஷன் பெற்ற நால்வர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.
11.4 கோடி ரிங்கிட் குத்தகைத் திட்டத்தின் மொத்த கட்டணத்தில் 3லிருந்து 5 விழுக்காடு வரை கமிஷன் வாங்கியதாக ஒரு நிறுவனத்தின் 65 வயதான செயல்முறை இயக்குநர், 38 வயது தலைமை நிர்வாகி, மற்றொரு நிறுவனத்தின் இரு இயக்குநர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
எம்ஏசிசி தலைமையகத்திற்கு அவர்கள் வாக்குமூலம் தரச் சென்றபோது, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் குத்தகைத் திட்டமானது நாட்டின் தென் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை நிர்மாணிப்பு என்று சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்ட நால்வரையும் 4 நாள்களுக்குத் தடுத்து வைக்க மாஜிஸ்திரேட் Irza Zulaikha Rohanuddin (இர்ஸா ரொஹானுடின்) உத்தரவிட்டார்.



