
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஹஜிஜி நூரின் அமைச்சரவையில் இதற்கு முன்னர் துணை முதல்வராக இருந்த Bung Mokhtar Raadin (புங் மொக்தார் ராடின்) புதிய அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
அவருக்குப் பதிலாக தஞ்சோங் கெராமாட் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் Shahelmi yahya (ஷாஹெல்மி யாஹ்யா) துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Jefri Arifin (ஜெஃப்ரி அரிஃபின்), Yacob Khan (யாக்கோப் கான்) ஆகியோரும் அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டனர்.
புத்தாத்தான் சட்டமன்ற உறுப்பினர் ஷாஹெல்மி புங் மொக்தாரின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு இணங்காமல் முதலமைச்சர் ஹஜிஜிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை உறுப்பினர்களான கிறிஸ்டினா லியூ(பிகே ஆர்), பூங் ஜின் ஸெ(ஜசெக), ஜேம்ஸ் ராலிப்(தே.மு) ஆகியோர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.



