
🔊To listen to this news in Tamil, Please select the text.
15ஆவது தேர்தலுக்குப் பின்னர், கடந்தாண்டு நவம்பர் 20ஆம் தேதி, பெரிக்காத்தான் தலைவர் முஹிடின் யாசின் பிரதமராவதற்கு ஆதரித்து, சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட அம்னோவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkasi (புவாட் ஸர்க்காசி) அறிவுறுத்தியுள்ளார்.
சத்தியப் பிரமாணப் பத்திரத்தை வெளி- யிட்டவர்களில் Hishammuddin Hussein (ஹிஷாமுடின் ஹுசேய்ன்- செம்ரோங்), Hasni Mohammad (ஹஸ்னி முகமட்-சிம்பாங் ரெங்கம்), Wee Ka Siong (வீ கா சியோங்- ஆயர் ஹீத்தாம்), Jalaluddin Alias (ஜலாலுடின் அலியாஸ்-ஜெலுபு) ஆகியோர் அதில் அடங்குவர் என ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டிருந்தர்.
மேலும், அவர்களை அடுத்து மஇகாவின் எம்.சரவணன் (தாப்பா), Wee Jeck Seng (வீ ஜெக் செங்-தஞ்சோங் பியாய்), Isam Isa (இசாம் இசா-தம்பின்), Adnan Abu Hassan (அட்னான் அபு ஹசான்-கோலபிலா), Arthur Joseph (ஆர்தர் ஜோசப் குருப்-பென்சிங்கான்), Abdul Rahman Mohamad (அப்துல் ரஹ்மான் முகமட்-லிப்பிஸ்) ஆகியோரும் சத்திய பிரமாணத்தை வெளியிட்டுள்ளதாக புவாட் தெரிவித்தார்.
சபா முதலமைச்சர் ஹஜிஜி நூருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் அம்னோவின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் மீதும் நடவடிக்கை வேண்டு- மென புவாட் வலியுறுத்தியுள்ளார்.



