
🔊To listen to this news in Tamil, Please select the text.
தோட்டத் துறை, விவசாயம், கட்டுமானம், சேவைத் துறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைத் தீர்க்க 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அரசு அனுமதியளித்துள்ளதாக மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் குறிப்பிட்டார்.
மேற்கண்ட தொழில்துறைகளில் உள்ளூர் தொழிலாளர் வேலை செய்ய விரும்பாததால், அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டுவரும் கட்டாய நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் பொருளாதாரம் மேம்பட காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
அந்நியத் தோழிலாளர்களின் வருகையால் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு எவ்வகையிலும் பாதிக்காது என்றும் சிவகுமார் குறிப்பிடுகிறார்.



