
🔊To listen to this news in Tamil, Please select the text.
இன்று முதல் 8.7 மில்லியன் பி40 பயனாளிகளுக்கு Sumbangan Tunai Rahmah (STR) ‘சும்பாங்கான் தூனாய் ரஹ்மா’ எனும் நிதியுதவித் திட்டத்தின் வழி ரொக்கப் பணம் வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பேங்க் சிம்பானான் நேஷனல் வங்கிலிருந்து பணத்தை மீட்டுக் கொள்ளலாம் என்று அன்வார் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் வழி குடும்பத்தினருக்கு தலா 300 ரிங்கிட்டும் மூத்த குடிமக்கள், திருமணமாகாதவர்களுக்குத் தலா 100 ரிங்கிட்டும் வழங்கப்படும்.


