32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கையூட்டு கொடுத்து வாக்கு சேகரித்த பாஸ் கட்சித் தலைவர் மீது தேர்தல் வழக்கு

🔥 Views : 5
👁 Reading Now : 23

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்தாண்டு நவம்பர் 19ஆம் தேதி நடந்த 15ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னர், கையூட்டு கொடுத்து வாக்கு சேகரித்ததாக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் இருவர் மீது தேசிய முன்னணி தேர்தல் வழக்குகளைத் (பெட்டிஷன்) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மாராங், கோல திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிகளில் நவம்பர் 15, 16,17ஆம் தேதிகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 500, 1,000 ரிங்கிட் என்ற தொகை வழங்கப்பட்டுள்ளது.
அந்தப் பணமானது ஐ-சிஸ்வா, ஐ-பெலியா, ஐ-பென்சன் எனும் பெயரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அத்தொகையானது வெளி மாநிலங்களில் இருந்து சொந்த மாநிலங்களுக்குச் சென்றூ வாக்களித்தோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணமானது திரெங்கானு மாநிலத்தின் சிறப்பு நிதியிலிருந்தும் பெரிக்காத்- தான் நிதியிலிருந்தும் வழங்கப்பட்டிருப்பதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாதிரியாக பணத்தைப் பெற்றிறுப்பதாகப் பலரும் ஒப்புக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சிலரே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளதாக திரெங்கானு தேசிய முன்னணித் தலைவர் Ahmad Said (அமாட் சைட்) தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles