32.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

செலவின விதிமீறலை அரசு ஊழியர்கள் தட்டிக் கேட்க வேண்டும்

🔥 Views : 28
👁 Reading Now : 49

🔊To listen to this news in Tamil, Please select the text.

பொதுச் சேவை ஊழியர்கள் அரசின் ஊதாரிதனமான செலவினத்தையும் அளவுக்- கதிகமான நிதி விரயத்தையும் தடுக்கும் கண்காணிப்பாளர்களாகச் செயல்பட வேண்டுமென பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய அரசு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி வரம்பை மீறி செலவிட்டுள்ளதாக தமது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் உத்தரவைத் தட்ட முடியாத அரசு ஊழியர்கள், பிரதமர் உட்பட அமைச்சர்களின் விதிமுறை மீறலைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
பெரிக்காத்தான் அரசாங்கத்தினால் செலவிடப்பட்ட 9,250 கோடி ரிங்கிட் செலவினத்தில், விதிமீறல்கள் பெருவாரியாக நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அன்வார், எம்ஏசிசி அதனை விசாரணை செய்ய பணிக்கப்- பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles