29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மேல்மட்டப் பதவிகளுக்குப் போட்டிக்கான தடை, அம்னோவை பாதிக்கும்

🔥 Views : 7
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவின் இரு மேல்மட்டப் பதவிகளுக்கான போட்டிக்குத் தடை விதிக்கப்பட்டது அதன் மாநிலத் தேர்தல் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த முடிவானது கட்சிக்குள்ளே பிளவை ஏற்படுத்தும் என்றும் அது இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி,நம்பிக்கையை இழக்கச் செய்யும். அம்னோ வெளிப்படையான மாற்றத்தை விரும்பாத கட்சி என்ற பெயரைச் சம்பாதித்து மலாய்க்காரர்களின் ஆதரவை மேலும் இழக்கச் செய்யும்.
கட்சியின் மூத்த தலைவர்களான இஸ்மாயில் சப்ரி யாக்கோப், ஹிஷாமுடி ஹுசேய்ன், கைரி ஜமாலுடின் ஆகியோர் அம்னோவிலிருந்து விலகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்னோவின் இந்த நிலையைப் பயன்படுத்தி, பெரிக்காத்தான் கூட்டணி தனது பலத்தை வலுவாக்கி அம்னோவை ஒதுக்கித் தள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles