
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியை துணைப் பிரதமராக நியமித்திருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாசிர் கூடாங் எம்பி Hassan Karim (ஹசான் கரிம்) குறிப்பிட்டுள்ளார்.
தேசிய முன்னணி, அம்னோவின் ஆதரவு இல்லாமல் ஒற்றுமை அரசாங்கம் நிலைக்க முடியாது. ஆனால், ஸாஹிட் அமைச்சரவையில் நீடித்தால் அது அன்வாருக்கும் பக்காத்தானுக்கும் சரிவைக் கொண்டுவரும் என அவர் எச்சரித்தார்.
வழக்குகளில் இருந்து ஸாஹிட் விடுவிக்கப்பட்டால், அன்வாரும் அவரது அரசாங்கமும் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து, வழக்கில் அரசு தலையிட்ட அவப்பெயரைச் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும், தீர்ப்பினை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் மேல் முறையீடு செய்வாரா என்பதும் கேள்விக் குறியே. தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யாவிட்டாலும், அன்வாரே அதற்கான கண்டனத்தை ஏற்க வேண்டியிருக்கும்.
ஸாஹிட்டினால் அன்வார், பிகேஆர், பக்காத்தான் ஆகியவை அவப் பெயரைச் சம்பாதிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதோடு மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டிவரும் என்றும் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும். தேசிய முன்னணி, அம்னோ தலைவர்கள் வைரஸ் போல அன்வார், பிகேஆர், பக்காத்தானை வெகுவாகப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பது நிச்சயம் என ஹசான் கரிம் சுட்டிக் காட்டினார்.



