29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

கைப்பேசியை இடையறாது பயன்படுத்திய மகளைத் தண்டித்த தந்தை கைது

🔥 Views : 8
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

தனது 15 வயது மகள் நள்ளிரவு வரை தொடர்ச்சியாகக் கைப்பேசியைப் பயன்படுத்- தியதை பொறுக்க முடியாத தந்தை ஒருவர், மகளைத் தாக்கியதோடு அவரைக் கொல்லப் போவதாகவும் அச்சுறுத்தியதன் பேரில் கைது செய்யப்பட்டார்.
உணவக உதவியாளரான 58 வயது தந்தை, கடந்த வெள்ளிக்கிழமை வேலை முடிந்து, இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியபோது, மகளின் நடவடிக்கையைக் கண்டித்து, தமது வார்பட்டையால் அடித்து, தம்முடன் கொண்டுவந்த இறைச்சி வெட்டும் கத்தியைக் காட்டி எச்சரித்ததோடு, கொல்லப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த 15 வயது பெண், அதே தினத்தில் இரவு 1.18 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் அது பற்றிப் புகாரை அளித்துள்ளார்.
அதன் பின்னர், சம்பந்தப்பட்ட தந்தை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 4 நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தலைவர் Fakhrudin Abdul Hamid (ஃபக்ருடின் அப்துல் ஹமிட்) தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles