29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

எனது விசாவை நீட்டிக்க பிரதமரின் உதவியை நாடினார்

🔥 Views : 10
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்தாண்டு ஆகஸ்டில் இருந்து காணாமல் போயிருக்கும் பாகிஸ்தான் பத்திரிகையாளர் Syed Fawad Ali Shah (சைட் ஃபாவாட் அலி ஷாவின்) மனைவி Syeda (செயீதா), இன்று காலாவதியாகும் தமது விசாவை மீண்டும் நீட்டிக்க பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உதவியை நாடியுள்ளார்.
தாம் பாகிஸ்தானுக்கு சென்றால், தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றும் தாம் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அச்சம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாமும் தமது சகோதரரும் தொடர்ந்து மலேசியாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டால், காணாமல் போயிருக்கும் தமது கணவரைக் கண்டு பிடிக்கவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டதோடு, பிரதமர் அன்வார் இதில் தலையிட்டு தமது மனுவை அனுதாபத்தோடு பரிசீலித்து உதவும்படி செயீதா கேட்டுக் கொண்டார்.
அண்மையில் அது பற்றிக் குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க சைட் ஃபாவாட் கடந்தாண்டு ஆகஸ்டிலேயே சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles