
🔊To listen to this news in Tamil, Please select the text.
கூடிய விரைவில் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அவற்றில் பக்காத்தான் மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடும் பட்சத்தில், தொகுதிப் பங்கீடு குறித்து, உறுப்புக் கட்சிகளுடன் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணியோடு கூட்டணி வைக்க பக்காத்தான் ஹராப்பானுக்குத் தடையேதும் இல்லையென சிலாங்கூர் மந்திரி பெசார் Amirudin Shaari (அமிருடின் ஷாரி) யும் பிகேஆர் துணைத் தலைவர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி)யும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அந்தத் தொகுதிப் பங்கீட்டில் மஇகாவின் பாரம்பரிய தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதை ஏற்கமுடியாது என மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் எம். சரவணனும் கூறியுள்ளனர். நேற்று பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.



