27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வழக்கறிஞர் ஸைட்டுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் காரணம் கோரும் கடிதம்

🔥 Views : 6
👁 Reading Now : 67

🔊To listen to this news in Tamil, Please select the text.

நஜிப்பின் எஸ்ஆர்சி நிதி முறையீட்டு முறையீட்டு வழக்கில் வழக்கறிஞர் தொழில் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்ட வழக்கறிஞர் Zaid Ibrahim (ஸைட் இப்ராஹிமிற்கு) காரணம் கோரும் கடிதத்தை வழக்கறிஞர், வழக்குரைஞர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பியுள்ளது.
நஜிப்பின் எஸ்ஆர்சி வழக்கின் மேல் முறையீடு கடந்தாண்டு ஆகஸ்டு 15லிருந்து 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏப்ரல் மாதமே அறிவிக்கப்பட்டது. வழக்கு நடக்கவிருந்த ஒரு மாதத்திற்கு முன்னர், அந்த வழக்கை ஏற்று நடத்தி வந்த ஷாபி அப்துல்லா வழக்கறிஞர் நிறுவனம் திடீரென்று நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக வழக்கறிஞர் ஸைட்டின் நிறுவனம் அமர்த்தப்பட்டது.
அதன் தலைமை வழக்கறிஞர் Hisyam Teh Poh Teik, மேல் முறையீட்டு வழக்கை நான்கு மாதம் ஒத்திவைக்கக் கேட்டுக் கொண்டதை கூட்டரசு நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, அவர் நஜிப்பிற்கு ஆதரவான வாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் புறக்கணித்தார்.
இது வழக்கறிஞர் தொழில் நெறிமுறைக்கு முரணானது என்றும் இந்தச் செயலானது வேண்டுமென்றே நஜிப்பின் வழக்கைத் தாமதப்படுத்தும் திட்டம் எனவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வழக்கறிஞர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு காரணம் கோரும் கடிதத்தை ஸைட்டுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles