31.3 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

அழகியின் பொங்கல் வாழ்த்து
கடும் கண்டனத்திற்கு உள்ளானது

🔥 Views : 23
👁 Reading Now : 39

🔊To listen to this news in Tamil, Please select the text.

பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழ்த்து தெரிவித்த அழகி காயத்திரி மூர்த்தியில் உடை அலங்காரம் ஊடகப் பயனர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
சேலை அணிந்து, வாழ்த்து தெரிவித்த அவர், தமது வயிறு, இடுப்புப் பகுதிகளை ஆபாசமாகக் காட்டியதை பலரும் விமர்சித்திருந்தனர்.
274,000 பேர் அந்த டிக் டோக் செயலியைக் கண்ணுற்ற வேளையில், 100,000 பேர் விமர்சித்திருந்தனர்.
காயத்திரியின் செயல் சமூகத்தின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அது பாலிவுட் கலாசாரத்தைப் பிரதிபலித்து இந்திய சமூகத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.
அதற்கு மறுமொழி கூறிய காயத்திரி, தமது அரைகுறை ஆடையைத் தற்காத்துப் பேசியதோடு, கலாசாரம் என்பது உடை உடுத்துவது மட்டுமில்லை என்றும் அது ஒருவரின் நடத்தை, மற்றவர்களிடம் அன்பு காட்டுவது, மூத்தோரை மதிப்பது போன்றவற்றில் அடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாம் உடுத்தியிருப்பதை விட சில இந்தியப் பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் இதைவிட ஆபாசமாக உடையணிந்து வருவதை இவர்கள் கண்டிக்கத் துணிவார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
தம்மைத் தூற்றி இழிவு படுத்துவோர் தங்களது பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்றும் வீணே வாய் சவடால் பேச வேண்டாமென்றும் சாடியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles