25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நெடுஞ்சாலை ஆபத்து அவசரத் தடத்தில் 100 கார்கள்

🔥 Views : 5
👁 Reading Now : 55

🔊To listen to this news in Tamil, Please select the text.

சீனப் பெருநாளுக்குப் முன்னர், ஜோகூர் பாருவிலிருந்து புத்ரா ஜெயாவுக்கு செல்லும் நெடுஞ்சாலையின் ஆபத்து அவசரத் தடத்தில் குறைந்தது 100 கார்கள் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை கண்காணிப்பில் இது கண்டுபிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது. ஆபத்து அவசரத் தடத்தில் பயணிப்பது 7 சாலைக் குற்றங்களில் அடங்கும் என சாலைப் போக்குவரத்து இலாகா தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட சாலைக் குற்றங்களில் கியூவை மீறிச் செல்லுதல், இரு கோடுகளில் முந்திச் செல்லுதல், பயணிக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துதல், பாதுகாப்புப் பட்டை, தலைக் கவசத்தை அணியாதிருப்பது ஆபத்து அவசரத் தடத்தில் பயணிப்பது போன்றவை அதில் அடங்கும்.
பொதுமக்கள் மேற்கண்ட விதிமுறைகளை எந்நேரத்திலும் அனுசரிப்பது கட்டாயமாகும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles