
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோழி, முட்டை விநியோகம் விரைவில் சீரடையும் என மலேசிய கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் Tan Chee Hee.(டான் சே ஹீ) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அச்சங்கத்தோடு அமைச்சர் Mohamad Sabu (முகமட் சாபு) கலந்துரையாடியதை அடுத்து, அந்த உறுதி கூறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டில் முட்டை பற்றாக்குறை நிலவியதை அடுத்து, இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய அரசு அனுமதியளித்தது. அதனையடுத்து, கால்நடை வளர்ப்போர் சங்கம் மேற்கண்ட உறுதிமொழியை அளித்துள்ளது.
இதனிடையே, பேரங்காடிகளுக்கு (ஹைபர் மார்க்கெட்) முட்டை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால் முட்டையின் விலை இயல்பாகக் குறையும் என்றும் உள்ளூரில் உற்பத்தியாகும் முட்டை ஏற்றுமதி செய்யப்படும்போது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யத் தேவையில்லை என்று மைடின் ஹைப்பர் மார்கெட் சங்கிலித் தொடரின் தலைவர் Ameer Ali Mydin (அமீர் அலி மைடின்) தெரிவித்தார்.



