29 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பினாங்கை கைப்பற்ற கெராக்கான் கனவுலகில் மிதக்க வேண்டாம்

GEORGETOWN 21 JUN 2018. Timbalan Menteri Pulau Pinang II, Prof Dr. P. Ramasamy semasa sidang media mengenai isu Akta Kesalahan Keselamatan (Langkah-Langkah Khas) 2012 (SOSMA) di pejabatnya Tingkat 52, Komtar, Pulau Pinang. NSTP/MIKAIL ONG

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கை மீண்டும் கைப்பற்றும் கெராக்கானின் கனவு ஒருபோதும் வெற்றி பெறாது என அம்மாநில துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்திருக்கும் கெராக்கான் அக்கூட்டணியின் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிரான போக்கினால் வெற்றியைப் பெற முடியாது என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராகச் செயல்பட்டு, 4டி லாட்டரி, மது விற்பனைக்குத் தடை போன்ற சட்டங்களை நிறை- வேற்றியிருக்கும் பாஸ் கட்சியின் நடவடிக்கை, கெராக்கானின் வெற்றியைப் பாதிக்கும் என டாக்டர் ராமசாமி எச்சரித்தார்.
1969 லிருந்து 2008 வரை பினாங்கில் கோலோச்சிய கெராக்கான், 2018இல் ஏற்பட்ட பேரலையான மாற்றத்தினால் படுதோல்வி அடைந்து செல்லாக் காசாக வீழ்ச்சி அடைந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles