
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேர்தல் காலங்களில் எவ்வித நோக்கமாகத்தில் தரப்படும் எதுவுமே லஞ்சம் என வகைப்படுத்தப்பட்டிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
இங்கு சட்டத்தின் விளக்கத்தை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். தனிநபர்களின் விளக்கத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்தார்.
வாக்காளர்களுக்குத் தேர்தல் காலங்களில் தரப்படும் நன்கொடை ஒரு வகை தர்மம் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் கூற்றைப் பற்றிக் கேட்டபோது, அஸாம் பாக்கி இவ்வாறு தெரிவித்தார்.
