
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோவிட் பெருந்தொற்று தணிந்து, நாட்டில் எல்லைகள் திறக்கப்பட்டிருப்பதால் நாட்டிற்கு வரும் அந்நிய நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது அதிகமான பயணிகள் தங்களின் குடிநுழைவு காரியங்களை முடிக்க முடியாமல் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக சுற்றுலா, கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் தியோங் கிம் சிங் கவலை தெரிவித்தார்.
இந்நிலை தொடர்ந்தால் இங்கு வரும் பயணிகளுக்குப் பல அசெளகரியங்கள் ஏற்படும் என்று அவர் தெரிவித்ததோடு, அரசு இதில் மிகுந்த கவனத்தைச் செலுத்தி அதிகமான குடிநுழைவு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென தியோங் கிம் சிங் கேட்டுக் கொண்டார்.



