
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தோனேசிய பணிப் பெண்களை வேலைக்கு அழைத்துவர அதிகபட்ச செலவு 15,000 ரிங்கிட் மட்டுமே என்றும் அதற்கும் அதிகமாக ஏஜெண்டுகள் வற்புறுத்தினால் அதனை அந்நாட்டு தூதரகத்திடம் புகார் தெரிவிக்கும்படி தூதரகப் பேராளர் Sigit S Widiyanto (சிகிட் எஸ் விடியாந்தோ) தெரிவித்தார்.
இந்தத் தொகையானது மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே கையெழுத்தான பணிப் பெண்கள் தருவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு சில ஏஜெண்டுகள் 20லிருந்து 30 ஆயிரம் ரிங்கிட் வரை விதிப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அது மிகவும் தவறு, ஒப்பந்தத்திற்கு முரணானது என்றும் சிகிட் விடியாந்தோ தெரிவித்தார்.



