
🔊To listen to this news in Tamil, Please select the text.
வாக்கு சேகரிக்க லஞ்சம் கொடுக்கப்- பட்டதற்கு எதிரான விசாரணை சட்டத்தின் அடிப்படையில்தான் நடப்பதாகவும் அது தனிப்பட்டோரின் வியாக்கியானத்திற்கு இணங்க மேற்கொள்ளப்படவில்லை என்று எம்ஏசிசி ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார்.
1954ஆம் ஆண்டு தேர்தல் குற்றவியல் சட்டம், லஞ்சம் என்பதற்கான விளக்கத்தைத் தெளிவாக விவரிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேர்தலில் வாக்குகளைப் பெற கொடுக்கப்படும் நன்கொடையும் அன்பளிப்பும் லஞ்சமே என சட்டம் குறிப்பிடுவதாகவும் தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தல் நடக்கும்போதும், நடந்த பின்னரும் கொடுக்கப்படும் லஞ்சமானது குற்றம் என்றே அது குறிப்பிடுவதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலின்போது நல்ல நோக்கத்தில் நன்கொடை கொடுக்கப்பட்டால் அது லஞ்சமாகாது என்று பெரிக்காத்தான் செயலாளர் ஹம்ஸா ஸைனுடினும், அது ஒரு வகையான தர்மம் என பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் குறிப்பிட்டதை அடுத்து, அஸாம் பாக்கி இந்த விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.



