
🔊To listen to this news in Tamil, Please select the text.
கெடா மாநிலத்திற்கு தைப்பூச பண்டிகைக்குச் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக மந்திரி பெசார் Sanusi Mad Nor (சனுசி மாட் நோர்) அறிவித்தார்.
இதனை மாநில சட்டமன்றம் அங்கீகரித்- துள்ளதாகவும் தைப்பூசத் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் கெடா மாநிலத்தவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினரோடு விடுமுறையைக் கழிக்க வேண்டுமென சனுசி கேட்டுக் கொண்டார்.
மே மாத வாக்கில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலை மனதில் வைத்தே இந்தச் சிறப்பு விடுமுறை விடப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. கடந்தாண்டு இந்தச் சிறப்பு விடுமுறை வழங்கப்படாததில் பெரிய சிக்கல் ஏற்பட்டு சனுசி கடும் கண்டனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.



