25.3 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பாடாங் செட்டி பெயர் விவகாரம்…செய்தியை திரித்து எழுதிய ஆங்கிலப் பத்திரிகை !கிள்ளான் நகராண்மைக் கழகம் விளக்கம்

ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியால் பாடாங் செட்டி விவகாரம் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது என்று கிள்ளான் நகராண்மைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
பாடாங் செட்டி பெயரை Dataran Majlis Perbandaran Klang எனும் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கடந்த மே 25ஆம் தேதி கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவருடன் நடந்த சந்திப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ், பண்டமாரன் சட்டமன்ற உறுப்பினர் தோனி, போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அட்மிஷம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் செட்டி பாடாங் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரம் சிலாங்கூர் மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் பெயர் மாற்றம் ஒத்திவைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் மே 28ஆம் தேதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இந்தப் பெயர் மாற்றத்திற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. பாடாங் செட்டி பெயர் மாற்றம் காண்கிறது என்று செய்தியை வெளியிட்டது.
இந்த பத்திரிகை வெளியிட்ட செய்தி பின்னர் அரசியல் விவகாரமாக மாறியது.
இது தொடர்பில் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் டாக்டர் அமாட் பாட்சில் இன்று அறிக்கையில் தாம் வெளியிட்ட தகவலை அந்த பத்திரிக்கை திரித்து எழுதி இருப்பதாக குறிப்பிட்டார்.
ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்க இந்த பத்திரிக்கை அறிக்கை வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கிள்ளான் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles