24.7 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பாடாங் செட்டி பெயர் விவகாரம்;குரல் எழுப்ப வில்லையா?சுத்தப்பொய் !

To listen this news in Tamil, Click play button!

கிள்ளான் பாடாங் செட்டி பெயர் மாற்றம் செய்யப்படும் விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பேசப்பட்டதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நான், இந்தியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிள்ளான் இந்தியர் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, குரல் எழுப்பவில்லை என்று கூறப்படுவது எல்லாம் சுத்தப்பொய் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பெயர் மாற்றம் தொடர்பில் ஆட்சிக்குழு கூட்டத்தில் எனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறேன். அதேபோல் சிலாங்கூர் இந்தியர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எங்களின் மெத்தனப் போக்குதான் இந்த பெயர் மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுவது எல்லாம் சுத்தப்பொய் என்று அவர் தெரிவித்தார்.
நாங்கள் ஒரு போதும் இந்தப் பெயர் மாற்றத்திற்கு அனுமதி வழங்கவில்லை..
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று வர்ணிக்கப்படும் பாடாங் செட்டி பெயர் வரலாற்றிலும் ஆவணங்களிலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எங்களின் போராட்டமாகும்
ஆகவே உண்மை எது என்று தெரியாமல் வதந்திகளை கிளப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles