34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

அரசின் குறைந்தபட்ட சம்பளம்
எங்களுக்கு இல்லையா?

🔥 Views : 7
👁 Reading Now : 69

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசுப் பள்ளிகளிலும் மருத்துவமனைகளிலும் வேலை செய்யும் பல மாநிலங்களையும் சேர்ந்த ஒப்பந்தத் துப்புரவாளர்கள், பாதுகாவர்கள் உள்ளடங்கிய 50க்கும் மேற்பட்டோர் நேற்று பிரதமர் அலுவலகத்தில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
குத்தகை உரிமையாளார்கள் தங்களுக்கான சம்பளத்தையும் அரசின் குறைந்த பட்ச சம்பளமான 1,500 ரிங்கிட்டை தங்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து பிரதமர் துறை அலுவலகத்தில் மகஜர் ஒன்றை அவர்கள் அளித்துள்ளனர்.
கடந்தாண்டு அமலுக்கு வந்த குறைந்தபட்ச சம்பளத்தைக் குத்தகையாளர்கள் வழங்க முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அவர்களின் பிரதிநிதி எஸ். தினகரன் தெரிவித்தார்.
வாழ்க்கையை ஓட்ட பெரும் சிரமத்தை எதிர்நோக்கும் தங்களுக்குக் குறித்த நேரத்தில் சம்பளமும் குறைந்தபட்ச சம்பளத்தையும் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திரண்டிருந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரதமரைக் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles