28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நிதி முறைகேடல் குற்றச்சாட்டினால் மாநிலத் தேர்தல்களில் பெரிக்காத்தனின் வெற்றி பாதிப்படையும்

🔥 Views : 5
👁 Reading Now : 38

🔊To listen to this news in Tamil, Please select the text.

கோவிட் காலத்தில் அரசின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் பெரிக்காத்தான் அரசு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதையும் குறுகிய காலத்தில் 30 கோடி ரிங்கிட்டை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதையும் ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது விசாரணை செய்து வருகிறது.
விசாரணைக்கு உதவும் வகையில், பெர்சத்துவின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்டுள்ளது.
இதில் பெர்சத்து குற்றம் இழைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அதன் செல்வாக்கிற்கும் நற்பெயருக்குப் பங்கமும் ஏற்படும் என்றும், இறுதியில் மாநிலத் தேர்தல்களில் அதன் வெற்றி வாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்று மலாயா பல்கலைக்கழகப் பேராசிரியர் Awang Azman Awang Pawi (அவாங் அஸ்மான் அவாங் பாவி) தெரிவித்தார்.
மாநிலத் தேர்தலுக்கு முன்னர் பெர்சத்துவின் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டால், அது அக்கட்சிக்குப் பேரிடியாக அமையும் என்றும் அதில் பாஸ் கட்சிக்குப் பெரும் பாதிப்பு இருக்காது என்றும் அவாங் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles