
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த பொதுத்தேர்தலில் வாக்களிக்க ரொக்கப் பணத்தை அரசியல் கட்சி ஒன்றிடமிருந்து திரெங்கானு வாக்காளர்கள் 90 பெற்றது மீதான விசாரணை நடைபெற்று வருவதாகத் தேர்தல் ஆணையர் Azam Baki (அஸாம் பாக்கி) தெரிவித்தார்.
திரெங்கானுவில் கோல திரெங்கானு, மாராங், கெமாமான் ஆகிய தொகுதிகளில் வாக்காளர் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட அரசியல் கட்சி ரொக்கப் பணத்தை வழங்கியது பற்றிய புகாரைத் தாங்கள் பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
ரொக்கப் பணம் கொடுத்தது பற்றி விளக்கமளித்த பாஸ் கட்சித் தலைவர் Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்), வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் அன்பளிப்பு, நன்கொடை போன்றவை ஒரு வகை தர்மமே என்று குறிப்பிட்டிருந்த வேளையில், தேர்தலின்போது பெறப்படும் எந்தவிதமான ரொக்கப் பணமும் லஞ்சமே என அஸாம் பாக்கி விளக்கம் அளித்திருந்தார்.



