
🔊To listen to this news in Tamil, Please select the text.
நெகிரி செம்பிலான் தனது 15ஆவது தேர்தலை நடத்தும் வகையில் அதன் சட்டமன்றம் ஜுன் 1ஆம் தேதி கலைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதன் மந்திரி பெசார் Aminuddin Harun (அமினுடின் ஹருண்) தெரிவித்தார்.
இந்தப் பரிந்துரையானது பக்காத்தான் தலைமைத்துவம் பரிசீலித்த பின்னர், தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களினால் ஜூன் 18ஆம் தேதிக்குப் பின்னரே கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதன் மந்திரி பெசார் Sanusi Nor (சனுசி மாட்) தெரிவித்திருந்தார்.
தேர்தல் செலவுகளைக் குறைக்க பாஸ் கட்சியின் கீழுள்ள கெடா, கிளந்தான், திரெங்கானு மற்றும் பக்காத்தானின் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென்ற கருத்து பரவலாக நிலவுகிறது.



