32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டோமி தோமஸுக்கு எதிரான ஷாரிரின்
புகார் மீது மேல் நடவடிக்கை இல்லை

🔥 Views : 8
👁 Reading Now : 61

🔊To listen to this news in Tamil, Please select the text.

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸுக்கு எதிரான அம்னோவின் மூத்த அரசியல்வாதியும் பெல்டாவின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ Shahrir Samad’s (ஷாரிர் சமாட்)டின் போலீஸ் புகாருக்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இயலாது என்று செந்தூல் போலீஸ் தலைவர் Beh Eng Lai (பே எங் லாய்) தெரிவித்துள்ளார்.
நஜிப் ரசாக்கிடமிருந்து 1எம்டிபி பணம் 1 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றது பண பரிவர்த்தனை முறைகேடு என்ற குற்றச்சாட்டை சுமத்திய டோமி தோமஸ், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக ஷாரிர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், அந்தக் குற்றச்சாட்டு அம்னோவுக்கும் தமக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டத்துறைத் தலைவர் தமது கருத்திற்கிணங்க குற்றவாளியின் மீது விசாரணை நடத்தவும், குற்றம் சாட்டவும், வழக்கை நடத்தவும் அதிகாரம் கொண்டிருப்பதால், அதனை தனிப்பட்டவர் தொடுக்கும் வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அது சட்டத்திற்கு உட்பட்டே இருப்பதாக பே எங் லாய் லாய் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles