
🔊To listen to this news in Tamil, Please select the text.
தற்போது காய்கறிகளின் விலை 160 விழுக்காடு அதிகரித்து வசதி குறைந்த மக்களுக்குப் பெருந் துன்பத்தைத் தருவதாகவும் இதனைத் தடுக்க அரசின் திட்டம் என்னவென பினாங்கு பயனீட்டாளர் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.
வெண்டைக்காயும் பயிற்றங்காயும் 6 லிருந்து 16 ரிங்கிட்டாகவும் தக்காளியின் விலை 4.50லிருந்து 10 ரிங்கிட்டாகவும் கத்தரிக்காய் 7இல் இருந்து 12 ரிங்கிட்டாகவும் விலை அதிகரித்துள்ளன.
இடைத்தரகர்களின் குறுக்கீடால் காய்கறிகளின் விலை வானளாவ உயர்ந்திருப்பதால் காய்கறி விநியோகத்தை அரசின் விவசாய சந்தைப்படுத்தும் ஃபாமா நிறுவனமே மேற்கொள்ள வேண்டுமென பினாங்கு பயனீட்டாளர் கழகம் கோரியுள்ளது.



