32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் துருக்கிக்கு 8.6 மில்லியன் ரிங்கிட் நன்கொடை

🔥 Views : 6
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த திங்கட்கிழமை காலையில் துருக்கியிலும் சிரியாவிலும் நேர்ந்த நிலநடுக்கத்தில் அதிகமாகப் பாதிக்கப்- பட்டிருக்கும் துருக்கியிற்கு 8.6 மில்லியன் ரிங்கிட்( 2 மில்லியன் டாலர்) நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியின் பாதித் தொகையை ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் பெருமந்துடன் வழங்க முன்வந்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
துருக்கியில் 7.8 ரெக்டர் கருவியின் புள்ளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 5,000 பேர் வரை மரணமடைந்திருக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. படு மோசமாகச் சிதைந்திருக்கும் துருக்கியிற்கு உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகின்றன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles