26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

தப்பான குற்றச்சாட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்ட நபருக்கு 240,000 ரிங்கிட் இழப்பீடு

🔊To listen to this news in Tamil, Please select the text.

தப்பான குற்றச்சாட்டுக்கு ஆளாகி 106 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த Iekmal Hisham Harun (லெக்மால் ஹிஷாம் ஹருண்) என்பவருக்கு அரசு மொத்தம் 240,000 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டுமென ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி Bhupindar Singh (பூபின்டர் சிங்) தீர்ப்பளித்தார்.
36.5 கிராம் ஹெரோய்ன் போதைப்பெருள் வழக்கில் கைது செய்யப்பட்ட லெக்மால், 2016 நவம்பர் 9ஆம் தேதி முதல் 106 நாள்களுக்கு விசாரணைக்காக தாப்பா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்
அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான Siti Nor Fauziah Setapa (சித்தி நோர் பவுஸியா செத்தாப்பா) தப்பான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி, ஆவணங்களில் அரசின் வழக்கறிஞரின் கையெழுத்தைப் போலியாக இட்டு, லெக்மாலின் மீது குற்றம் சுமத்தியது கண்டறியப்பட்டது.
அதிகாரத் துஷ்பிரயோகத்தினால் தவறாகக் குற்றச்சாட்டி, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதால், லெக்மாலுக்கு அரசு நாளொன்றுக்கு 2,000 ரிங்கிட் எனும் கணிப்பில் இழப்பீடும், கூடுதல் அபராதமாக 30,000 ரிங்கிட்டையும் வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles