
🔊To listen to this news in Tamil, Please select the text.
பினாங்கின் இறையான்மை குறித்து கேள்வி எழுப்பிய கெடா மந்திரிபெசார் Muhamad Sanusi Mohd Nor ருக்கு எதிராக DAP ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் R. S .N Rayer இன்று போலீசில் புகார் செய்துள்ளார். சனுசியின் நடவடிக்கைகைள் வரம்பு மீறியதாக இருப்பதால் அவருக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் Rayer கேட்டுக்கொண்டார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்பவே பினாகு மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பினாங்கு மாநிலம் உருவானதற்கு எதிராக சனுசி பேசியிருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என ராயர் சுட்டிக்காட்டினார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமின்றி பினாங்கு மாநில கவனர்களை நியமிக்கும் மாட்சிமை தங்கிய பேரரசரின் அதிகாரத்தையும் கேள்வி எழுப்பும் வகையில் சனுசி பேசியுள்ளார் என பினாங்கு தீமோர் லாவுட் போலீஸ் நிலையத்தில் சனுசிக்கு எதிராக புகார் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது ராயர் விவரித்தார். மந்திரிபுசார் என்ற முறையில் அவர் பொறுப்புணர்வோடு பேச வேண்டும் என்பதோடு சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனையைம் அவர் கேட்கவேண்டும் என ராயர் வலியுறுத்தினார்.



