
🔊To listen to this news in Tamil, Please select the text.
அன்வார் இப்ராஹிம் ஆட்சியில் அமைச்சர்களின் குடும்பத்தினர் அரசு பதவிகளில் ஆலோசகர்களாகவும் அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டால், அவர்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படக்கூடாதென்று பிரதமர் கூறியிருப்பது சரியான முடிவாக இருக்க முடியாது என வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடைமுறை ஒரு தவறான முன்மாதிரி என்றும் அரசு நிர்வாகத்தில் அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோலோச்சுவது சரியல்லவென்றும் அம்பிகா குறிப்பிட்டார்.
நூருல் இஸ்ஸாவை பொருளாதார, நிதித் துறையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டது வீணான பிரச்சினைக்கு வித்திட்டிருப்பதாக அம்பிகா எச்சரித்தார்.



