
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் தேர்தலில் கைரி ஜமாலுடின் போட்டியிட்டு வென்ற பின்னர், அவர் மந்திரி பெசார் பதவிவியில் அமர்வார் என தெ ஸ்டார் நாளேடு குறிப்பிட்டுள்ளது.
அவரை எந்தக் கட்சி போட்டியிட அழைத்திருப்பதாக அப்பத்திரிகை வெளியிட- வில்லை என்றும் சில கட்சிகள் தங்களின் வேட்பாளராக நிற்க அவரைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் பேசிய கைரி, சில கட்சிகள் தம்மை அணுகியதாகவும் அவற்றை தாம் நுணுக்கமாக ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மாநிலத் தேர்தல் தமக்கு வாய்ப்பை வழங்கினாலும் மேலுமொரு தேர்தலைச் சந்திக்க தாம் தயாராக இல்லையென்றும் தெரிவித்தார்.
ரெம்பாவ் தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வென்ற கைரிக்கு, இம்முறை அங்கு போட்டியிட வாய்ப்பு தராமல், சுங்கை பூலோவில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதனையடுத்து, அவர் அம்னோ தலைமைத்- துவத்துக்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



