27.1 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

நீலாய் சட்டவிரோத குடியிருப்பில் திடீர் சோதனை சட்டத்துக்கு உட்பட்டதே

🔥 Views : 17
👁 Reading Now : 36

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிப்ரவரி 1ஆம் தேதி நீலாய் ஸ்பிரிங்ஸில் இந்தோனேசிய சட்டவிரோத குடியிருப்பில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 67 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
அந்தக் குடியிருப்பு முதன்மை சாலக்கு ஒன்றரை கிலோ மீட்டரில் அமைந்திருப்பதாகவும் அதில் நாய்கள் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டு, குடியிருப்புக்கான எல்லாவித கட்டமைப்பு வசதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. மேலும், அங்கு தற்காலிகப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வந்ததாகக் குடிநுழைவுத் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud (கைருல் ஸைமி டாவுட்) தெரிவித்தார்.
அங்கு குடியிருந்தோர் சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் மலேசியாவிலேயே தங்கியிருக்க திட்டமிட்டிருந்தனர்.
அவர்களைக் கைது செய்தது நாட்டின் சட்டத்திற்கு இணங்கவே என்றும் அந்தச் சோதனை நடவடிக்கையில் போலீஸார் எந்தவிதமான கெடுபிடியையும் முரட்டுத் தனத்தையும் காட்டாமல் அமைதியான முறையில் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles