
🔊To listen to this news in Tamil, Please select the text.
அரசு வேலைகளில் பூமிபுத்ரா அல்லாதவர்கள் சேர விரும்பாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கிறது.
கோட்டா முறையில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, திட்டமிட்டே அவர்களை ஒதுக்குவதாக குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
அதனை விடுத்து அரசு வேலைகளில் சம்பளம் குறைவாகவும், எதிர்கால முன்னேற்றம் அறவே இல்லாததும் பாகுபாடு காட்டப்படுவதாலும் பூமிபுத்ரா அல்லாதோர் அதில் விருப்பம் காட்டுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், திறன்மிக்க பூமிபுத்ரா அல்லாதவர்களையும் தாண்டி திறமையில்லாத, செயல்படாத பூமிபுத்ராக்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமமான வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு கொள்கையை அரசு அமல்படுத்தாத வரையில், பூமிபுத்ரா அல்லாதவர்களை அரசு வேலைகளில் கவர்ந்திழுப்பது முடியாத காரியம் என்றும் சொல்லப்படுகிறது.



