
🔊To listen to this news in Tamil, Please select the text.
பிரதமரின் விருப்பத்தின்படி அந்நியத் தொழிலாளர்களை ஏஜெண்டுகளின் மூலம் தருவிப்பதை நிறுத்தினால், குறைந்தது 80 விழுக்காடு செலவினத்தைக் குறைக்க முடியும் என Malaysian Employers Federation (மலேசிய தொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தருவிப்பில் பல்வேறு சிரமங்களையும் சிக்கல்களையும் எதிர்நோக்கும் முதலாளிகள் பெரும் செலவை ஈடுகட்ட வேண்டிய நிலையில் உள்ளதாக அதன் தலைவர் Syed Hussain Syed Husman (சைட் ஹுசேய்ன் சைட் ஹுஸ்மான்) தெரிவித்தார்.
செலவின குறைப்பானது வலுக்கட்டாய வேலை வாங்கும் செயலைக் குறைக்கும் என்றும் மூன்றாம் தரப்பின் தலையீட்டினால், அந்நியத் தொழிலாளர்கள் சொந்த நாட்டில் பெரும் கடனை வாங்கி, இங்கு வர வேண்டிய நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இங்கிருக்கும் தொழில் திறன்மிக்க, சட்டப்பூர்வ அகதிகளை வேலைக்கு அமர்த்த அரசு அனுமதி வழங்க வேண்டுமென சைட் ஹுசேய்ன் கேட்டுக் கொண்டார்.



