26.4 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

உயர்கல்விக் கடனுதவியைத் தள்ளுபடி செய்யும் திட்டமில்லை

🔊To listen to this news in Tamil, Please select the text.

நாட்டில் 1.84 மில்லியன் உயர்கல்வி மாணவர்களின் கல்விக்கு உதவ இது வரை 4,234 கோடி ரிங்கிட் கல்வி உதவிநிதியாக வழங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சர் Mohd Khalid Nordin (முகமட் காலிட் நோர்டின்) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நிதியை அரசு தள்ளுபடி செய்யத் திட்டமில்லை என்றும் உதவிநிதி பெற்றவர்கள் ஒப்பந்தத்தின்படி அதனைச் செலுத்தியே ஆக வேண்டுமென அவர் தெரிவித்தார்.
எனினும், பி40 பிரிவு மாணவர்களுக்கு உதவ, கடனைத் திருப்பிச் செலுத்தும் கால வரம்பை ஒத்தி வைத்தல், கடனைச் செலுத்தும் காலகட்டத்தை நீட்டித்தல், கல்வி முடிந்து 12 மாத காலத்திற்குப் பின்னரே கடனைச் செலுத்த அனுமதித்தல் போன்ற சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles