27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மசீச, மஇகாவுக்கு மாநிலத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு குறைவே!

🔥 Views : 5
👁 Reading Now : 50

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ இடம் பெற்ற பின்னர் மசீசவும் மஇகாவும் இடம் தெரியாமலும் முக்கியத்துவம் இல்லாமலும் போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்னர், அம்னோ இக்கட்சிகளை நம்பியிருந்த காலம் மாறி, இப்போது அது உயிர்வாழ பக்காத்தானின் உதவியை நாடியுள்ளது.
இந்நிலையில், இவ்வாண்டு நடைபெற விருக்கும் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளுக்கும் போட்டியிட இடம் ஏதும் ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
15ஆவது பொதுத்தேர்தலில் மசீச ஆயர் ஹீத்தாம், தஞ்சோங் பியாய் தொகுதிகளிலும் மஇகா தாப்பா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், மாநிலத் தேர்தல்களில் மசீசவையும் மஇகாவையும் அம்னோவின் தேர்தல் பரப்புரைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அம்னோ வெற்றி பெற்றால், பொதுத்துறை நிறுவனங்களில் அவற்றிற்கு இடம் ஒதுக்கப்படும் சாத்தியம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles