27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

நூருல் இஸ்ஸாவின் புதிய நியமனமும் உறவினர்களுக்கு அனுசரணை காட்டும் செயலே!

🔥 Views : 7
👁 Reading Now : 31

🔊To listen to this news in Tamil, Please select the text.

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வார் பிரதமரின் பொருளாதாரத் துறையின் மூத்த ஆலோசகர் பதவியிலிருந்து இப்போது ஆலோசனை வாரிய செயலகத்தின் தலைவர் Mohd Hassan Marican (முகமட் ஹசான் மரிக்கானுடன்) இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தில் சம்பளம் எதுவும் வழங்கப்படாவிட்டாலும், இதுவும் உறவினர்களுக்கு அனுசரணை காட்டும் செயலேயாகும் என தாசேக் குளுகோர் எம்பி Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜான்) சாடினார்.
இந்த ஆலோசனை வாரியம் நாட்டின் உதவிநிதியை மறு சீரமைப்பது, வருமானத்தை அதிகரித்து, நிர்வாகச் செலவைக் குறைக்க ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை செயலகத்தின் விவரங்களை நூருல் இஸ்ஸா காணும் வாய்ப்பு இருப்பதாகவும் அது பல பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதால், ஒற்றுமை அரசு அந்த நியமனத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென வான் சைஃபுல் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles